‘பீமின் பயணம்’ – சிறார் நூல் வெளியீட்டு விழா சென்னை நீலம் புக் நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியை தாரகை தொகுத்து வழங்கினார். நிலாதம்மாவின் குழந்தைகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 💙🎈✨
172-வது தொடர் பெளர்ணமி (01-பிப்ரவரி-2026)
ஒவ்வொரு மாதமும் நடைபெறுகிற பெளர்ணமியை நிலாதம்மாவின் உறுப்பினர் ஒருவர் முன்னின்று நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. அந்த வகையில் இந்த மாதம் உபாசகி பிரியா முன்னின்று தொகுத்து வழங்கி நடத்தினர்.
புத்தபூஜையுடன் நிகழ்வானது தொடங்கியது. புதிதாக வந்திருப்பவர்களுக்கு நிலாதம்மாவின் பயணம் பற்றி உபாசகி கோகிலா விளக்கினார். இந்த மாத பௌர்ணமிக்கு வருகை தந்த சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார் உபாசகி அனுஷியா.
இந்த மாத பெளர்ணமிக்கு புலியந்தோப்பு மக்களிடையே வேலை செய்துவரும் கள செயற்பாட்டாளர் ராஜலக்ஷ்மி MSW படித்தவர் (Don Bosco ,social service, program manager ஆக வேலை செய்பவர்)சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசும் போது “நிலாதம்மாவின் நாக்பூர் தீக்சாபூமி பயணம் தான் எனக்கு மிகப்பெரிய அம்பேத்கரிய பார்வையை ஏற்படுத்தியது என்று கூறினார்.
பெளர்ணமி நிகழ்விற்கு வருகைபுரிந்தவர்களை வரவேற்ற பிறகு இந்த பெளர்ணமி நிகழ்விற்கு புதிதாக வந்தவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினார்கள்.
கரும்பிடாரி கலைக்குழு பறையிசைத்து அம்பேத்கரிய பெளத்த பண்பாட்டு பாடல்களையும், நாடகங்களையும் நிகழ்த்திக்காட்டினர்.
புதிதாக வந்திருந்த பல்வேறு நபர்கள் தங்களுக்கு இந்த பெளர்ணமி குறித்த புரிதலை நிலாதம்மா தான் வழங்கியது. ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி நிகழ்விற்கு வருகை புரிவதற்கு முயற்சிப்பதாகச் சொன்னார்கள்.
அனைவருக்கும் இரவு உணவு தானம் வழங்கப்பட்டது.
ரோகித் வெமுலா
ரோகித் வெமுலா நிழல்களிலிருந்து நட்சத்திரங்களோடு கலந்துவிட்ட பத்தாம் ஆண்டு நினைவரங்கம் சென்னையில் நடக்கிறது. நிகழ்வின் முதல் அமர்வில் கல்வி நிலையங்களில் சாதி, மத, பாலின பாகுபாடுகள் குறித்து நிலாதம்மாவிலிருந்து சட்டக்கல்லூரி மாணவி தாரகை பேசுகிறார்...
பெளத்த மாநாடு
நவீன இந்தியாவில் பெளத்தத்தின் 70வது ஆண்டு மற்றும் உலக அமைதிக்கான பேரணி - பூர்வ பெளத்தர்கள் மாநாடு சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. நிலாதம்மா பேரணியில் கலந்து கொண்டது. மேடையில் நிலாதம்மா சார்பாக தாரகை உரையாற்றினார்.
அன்னை ரமா பிறந்தநாள்
அசோக நகர் புத்த விகாரில் அன்னை ரமாமாய் அவர்களின் பிறந்த நாள் குறித்த உரையாடலும், கூட்டு தியானம் நடைபெற்றது...






































